இறவாத வார்த்தை என்றும் உயிரளிக்கும் வார்த்தை என்றும் சொல்லலாம். ஏனெனில் வார்த்தை மனு உருவானார். நம்மிடையே குடி கொண்டார். தொடக்கத்தில் கடவுளோடு இருந்த வார்த்தையாலேயே அனைத்தும் உண்டாயின.

இறை வார்த்தையின்படி வாழ்ந்தால் நம் பாதைக்கு தீபமும் கால்களுக்கு வெளிச்சமும்மாய் இருக்கும். நமக்குப் பிடித்தவர்கள் பிரியமானவர்கள் நமக்கு ஒரு கடிதம் எழுதினால் அதை எத்தனை முறை எப்படி எல்லாம் எடுத்து எடுத்து படிப்போம். சூரிய ஒளியில் படிப்போம். தலைஅனை அடியில் பத்திரமாக வைப்போம். நெஞ்சோடு அணைத்து அதை மீண்டும் முத்தமிட்டு மகிழ்வோம்.

சாதாரன மனிதர் எழுதும் கடிதமே அவ்வளவு மகிழ்ச்சி தருமானால், இறைவன் நமக்கு எழுதிய கடிதமான நற்செய்தியை இறைவார்த்தையை நாம் எப்படி எல்லாம் படிக்க வேண்டும்.

இறைவார்த்தை இறைவன் நமக்குத் தந்த உயில் என்றும் சொல்லலாம். உயருள்ள வார்த்தை. அது செயல் படுத்தும். உள்ளத்தின் ஆழத்தின் அந்தரங்களில் பேசும். மனமாற்றமடையச் செய்யும். சரியானவைகளை சிந்திக்க வைக்கும். நம்மை பலபடுத்தும். பயங்களை அகற்றும். உலர்ந்த எலும்புங்களை உயிருள்ளதக்கும். கல்லான இதயத்தை கனிவுள்ளதாக மாற்றும். கோணலனவைகளை செம்மையாக்கும். நாம் அறியாததும் புரியததுமான பெரிய காரியங்களை நமக்கு அறிவிக்கும். கழுகின் இளமைப்போல நம் இளமையை புதிதாக்கும். புதிய வாழ்வைத் தரும். ஓடினாலும் களைப்படையாத, நடந்தாலும் சோர்வடையாத கால்களை தரும். சாரமுள்ள உப்பாய், மலை மேல் உள்ள விளக்காய் நம்மை ஒளிரச்செய்யும். பேறுபெற்றவர்களாய் இறை மகிமையில் பங்கு பெறச் செய்யும். இறை வார்த்தையை வாழ்வாக்கிய அன்னை மரியின் அடிச் சுவடில் நாமும் நடந்து இறை சாட்சிகளாய் வாழ்வோம்.