"தேவன் , தம்முடைய ஒரே பேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ, அவன் கேட்டு போகாமல் நித்திய ஜீவனை அடையும் படிக்கு, அவரை தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்"(யோவ 3 16) 

இறைவன் நம்மேல் கொண்ட அளவற்ற அன்பினால் தான், தாம் உண்டாக்கிய அனைத்து ஜீவராசிகள், தாவரங்கள், நீர் வாழ் உயிரினங்கள் அனைத்தயும் ஆளும் உரிமையை நமக்கு அருளினார்.உலகில் மக்கள் தேவ அன்பை மறந்து ஏகமாய் கெட்டு போயிருக்கையில், நம்மை மீட்க , நம்மை இரட்சிக்க  தம் ஒரே பேரான குமரனை இவ்வுலகில் ஜெனிப்பித்து, நம்மை இரட்சித்து தம் அன்பை வெளிக்காட்டினார்.நியாய சாஸ்திரி ஒருவர் இயேசுவை சோதிக்கும்படி,"நியாய பிராமாணத்திலே எந்த கற்பனை பிரதனமானது" என்று கேட்டபொழுது, இயேசு இரண்டு கற்பனைகளை கூறினார்.

1.தேவ அன்பு 
2.பிற சிநேகம்

முதலாவது , உன் தேவனாகிய கர்த்தரை முழு ஆத்துமாவோடும் , முழு மனதோடும் அன்பு கூறுவாயாக.

இரண்டாவது என்னவென்றால் உன்னிடத்தில் அன்பு கூறுவது போலப் பிறரிடத்திலும் அன்பு கூறுவாயாக. இந்த இரண்டு கற்பனைகளிலேயே எல்லா கற்பனைகளும் அடங்கியிருக்கிறது என்று கூறினார். இந்த அன்பை குறித்து தான் புனித பவுல் அடிகளார் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகம் 13ம் அதிகாரத்தில் மிகவும் அழகாக கூறியுள்ளார்.  .நான் மனுஷர் பாஷைகளயும், தூதர் பாஷைகளயும் பேசினாலும் , அன்பு எனக்கிராவிட்டால், சத்தமிடுகிற கைத்தளம் போலிருப்பேன்.தீர்க தரிசன வார்த்தை உடையவாராய் இருந்து, சகல இரகசியங்களையும், சகல அறிவையும் அறிந்தாலும் , மலைகளை பெயர்க்க தக்கதாக சகல விசுவாசமுள்ளவனாய் இருந்தாலும் , அன்பு எனக்கிராவிட்டால் நான் ஒன்றும் இல்லை . எனக்கு உண்டான யாவற்றையும் அண்ன தானம் பண்ணினாலும் என் சரீரத்தை சுட்டெரிக்க படுவதர்க்கு கொடுத்தாலும் அன்பு எனக்கிராவிட்டால் எனக்கு பிரயோஜனம் ஓன்றும் இல்லை .

அன்பு நீடிய சாந்தமும், தயவும் உள்ளது. அன்புக்கு பெருமை இல்லை, அன்பு தன்னை புகழாது, இறுமாப்பிராது . அயோக்கியத்தனதத்தை செய்யாது , தற்புகழ்ச்சி நாடாது , சினமடையாது , தீங்கு நினையாது . அநியாயத்தில்  சந்தோஷப்படாமல் , சத்தியத்தில்   சந்தோஷப்படும். சகலத்தையும்  தாங்கும், சகலத்தையும் விசுவசிக்கும், சகலத்தையும் நம்பும்.சகலத்தையும் சகிக்கும். அன்பு ஒருக்காலும் அழியாது. தீர்க தரிசனங்களானாலும் ஒழிந்துபோம், அறிவானாலும் ஒழிந்துபோம். அன்பே பிரதானம். இப்படிப்பட்ட அன்பைத் தான் நம் தேவன் நம்மேல் பொழிந்து வருகிறார். நீதிமானுக்காக ஒருவன் மரிக்கிறது அரிது. நல்லவனுக்காக ஒருவேளை ஒருவன் மரிக்க துணிவான். நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்க பண்ணுகிறார். எனவே, நாம் கலங்கமற்றவர்களாய் தேவ அன்பிலும், பிற சிநேகத்திலும், நிலைத்து, இயேசு கிறிஸ்து காட்டிய ஜீவா பாதையில் நடந்து ஜீவ கிரீடத்தை அடைய முயல்வோம்.சகல துதி, கணம், மகிமை ஸ்தோத்திரம் யாவும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கே என்றென்றும் உரித்தாகுக!

                                                           இயேசு நாமம் வாழ்க!!!