Rosary and Novenas


முதல்வர்: தந்தை, மகன், தூய ஆவியின் பெயராலே
எல்லோரும்: ஆமென்! 

முதல்வர்: விசுவாச பிரமாணம் 

எல்லோரும்:
பரலோகத்தையும் பூலோகத்தையும் படைத்த எல்லாம் வல்ல பிதாவாகிய சர்வேசுரனை விசுவசிக்கின்றேன் 
அவருடைய ஏக சுதனாகிய  நம்முடைய நாதர் இயேசு கிறிஸ்துவையும் விசுவசிகின்றேன் 
அவர் பரிசுத்த ஆவியினால் கற்பமாய் உற்பவித்து கண்ணிமரியிடமிருந்து பிறந்தார் 
போஞ்சு பிலாத்தின் அதிகாரத்தில் பாடுபட்டு சிலுவையில் அறையுண்டு மரித்து அடக்கம் செய்யப்பட்டார்    
பாதாளத்தில் இறங்கி மூன்றாம் நாள் மரித்தோரிடமிருந்து உயிர்தெழுந்தார்  பரலோகத்திற்கு எழுந்தருளி எல்லாம்வல்ல பிதாவாகிய சர்வேசுரனுடைய வலது பக்கத்தில் வீற்றிருக்கிறார். அவ்விடத்திலிருந்து சீவியரையும் மரித்தோரையும் நடுத்தீர்க்க வருவார். பரிசுத்த ஆவியை விசுவசிக்கின்றேன், பரிசுத்த கத்தோலிக்க திருச்சபையை விசுவசிக்கின்றேன். அசிஷ்டவர்களுடைய சமூதீதப் பிரயோசனத்தை விசுவசிக்கின்றேன்  
பாவ பொறுத்தலை  விசுவசிக்கின்றேன்  
சரீர உத்தானத்தை விசுவசிக்கின்றேன்  
நித்திய சீவியத்தை விசுவசிக்கின்றேன்  -ஆமென்!

பெரிய மணியில்:


மெய்யான இறைவனும் மெய்யான மனிதனும் ஒன்றாயிருக்கிற இயேசுநாதர் சுவாமி படிப்பித்த பரலோக மந்திரம் சொல்கிறது.

பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் அர்ச்சிக்கப் படுவதாக.உம்முடைய இராட்ச்சியம் வருக. உம்முடைய சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவது போல, பூலோகத்திலும் செய்யப்படுவதாக.
எங்கள் அனுதின உணவை எங்களுக்கு இன்று அளித்தருளும். 
எங்களுக்குத் தீமை செய்தவர்களை நாங்கள் பொறுப்பதுபோல, எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும்.
எங்களைச் சோதனையில் விழவிடாதேயும். 
தீமையிலிருந்து எங்களை இரட்சித்தருளும். 
ஆமென். 


மூன்று சிறிய மணியில்:  


1. பரம தந்தையாம் இறைவனுக்கு மகளாய் இருக்கிற புனித இறையன்னையே, எங்களிடம் விசுவாசம் பலனளிக்கும்படியாக உம் திருமைந்தனை மன்றாடும். அருள் நிறைந்த மரியே வாழ்க! கர்த்தர் உம்முடனே. பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்வர் நீரே. உம்முடைய திருவயிற்றின் கனியாகிய இயேசுவும் ஆசீர்வதிக்கப்பட்டவரே. 



அர்ச்சிஷ்ட மரியாயே, சர்வேசுரனுடைய மாதாவே பாவிகளாயிருக்கிற எங்களுக்காக இப்பொழுதும் எங்கள் மரண நேரத்திலும் வேண்டிக்கொள்ளும். -ஆமென்.

2. திருமகனாம் இறைவனுக்குத் தாயாய் இருக்கிற புனித இறையன்னையே, எங்களிடம் நம்பிக்கை வளரும்படியாக உம் திருமைந்தனை மன்றாடும். அருள் நிறைந்த....

3. தூய ஆவியாராகிய இறைவனுக்கு மிகவும் ஏற்புடையவராய் இருக்கிற புனித இறையன்னையே, எங்களிடம் அன்பு வளரும்படியாக உம் திருமைந்தனை மன்றாடும். அருள் நிறைந்த....

மூன்று சிறிய மணிகளுக்குப் பின்:

திரித்துவத் துதி:
                  
பிதாவுக்கும், சுதனுக்கும், பரிசுத்த ஆவிக்கும் மகிமை உண்டாவதாக. ஆதியிலே இருந்தது போல, இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென். 



ஒவ்வொரு மறை உண்மைகளைச் சொல்லி தியானிப்போம்:

ஒரு பரலோக மந்திரம், 10 அருள் நிறைந்த மந்திரம் மற்றும் ஒரு திரித்துவத் துதி சொல்வோம். 



ஒவ்வொரு பத்து மணிகள் முடிந்ததும்:
ஒ ! எங்கள் இயேசுவே ! எங்கள் பாவங்களை மன்னியும் ! எங்களை நரக நெருப்பிலிருந்து  காப்பாற்றும்!
எல்லா ஆதுமங்களையும், விசேஷமாய் உமது இரக்கத்தின் உதவி யாருக்கு அதிக அவசியமோ அவர்களை மோட்ச கரை சேர்த்தருளும்!

மகிழ்ச்சி நிறை மறை உண்மைகள்:              
(திங்கள், சனி)
• கபிரியேல் தூதர் கன்னிமரியாவுக்கு மங்கள வார்த்தை சொன்னதை தியானித்து, தாழ்ச்சி என்னும் வரத்தைக் கேட்டுச் செபிப்போமாக.
• கன்னி மரியாள் எலிசபெத்தம்மாளைச் சந்தித்ததைத் தியானித்து, பிறரன்பு என்னும் வரத்தைக் கேட்டு செபிப்போமாக.
• இயேசு பிறந்ததைத் தியானித்து, எளிமை என்னும் வரத்தைக் கேட்டு செபிப்போமாக.
• இயேசு கோயிலில் காணிக்கையாக ஒப்புக் கொடுத்ததை தியானித்து, இறைவனின் திருவுளத்துக்குப் பணிந்து நடக்கும் வரத்தைக் கேட்டு செபிப்போமாக.
• காணாமற் போன இயேசுவைக் கண்டடைந்ததை தியானித்து, நாம் அவரை எந்நாளும் தேடும் வரத்தைக் கேட்டு செபிப்போமாக.

துயர் மறை உண்மைகள்:


      ( செவ்வாய், வெள்ளி)
• இயேசு இரத்த வியர்வை சிந்தியதைத் தியானித்து, நம் பாவங்களுக்காக மனத்துயர் அடைய செபிப்போமாக!
• இயேசு கற்றூணில் கட்டுண்டு அடிப்பட்டதைத் தியானித்து, புலன்களை அடக்கி வாழும் வரம் கேட்போமாக!
• இயேசு முள்முடி தரித்ததைத் தியானித்து, நம்மையே ஒடுக்கவும், நிந்தை தோல்விகளை மகிழ்வுடன் ஏற்கவும் செபிப்போமாக!
• இயேசு சிலுவை சுமந்து சென்றதைத் தியானித்து, வாழ்க்கைச் சுமையை பொறுமையோடு ஏற்று வாழச் செபிப்போமாக!
• இயேசு சிலுவையில் அறையப்பட்டு இறந்ததைத் தியானித்து, இயேசுவை அன்பு செய்யவும், பிறரை மன்னிக்கவும் வரம் கேட்போமாக!

மகிமை நிறை மறை உண்மைகள்:


     ( புதன், ஞாயிறு )
• இயேசு உயிர்த்தெழுந்ததைத் தியானித்து, உயிருள்ள விசுவாசத்துடன் வாழ செபிப்போமாக!
• இயேசுவின் விண்ணேற்றத்தைத் தியானித்து, நம்பிக்கையுடன் விண்ணக வாழ்வைத் தேடும் வரம் கேட்போமாக!
• தூய ஆவியாரின் வருகையைத் தியானித்து, நாம் அனைவரும் ஆவியாரின் ஒளியையும் அன்பையும் பெற செபிப்போமாக!
• இறையன்னையின் விண்ணேற்பைத் தியானித்து, நாமும் விண்ணக மகிமையில் பங்குபெற செபிப்போமாக !
• இறையன்னை விண்ணக மண்ணக அரசியாக மணிமுடி சூட்டப் பெற்றதைத் தியானித்து, நம் அன்னையின் மீது ஆழ்ந்த பக்தி கொள்ள செபிப்போமாக !

ஒளி நிறை மறை உண்மைகள்: 


    (வியாழக் கிழமை)
• இயேசு யோர்தான ஆற்றில் திருமுழுக்கு பெற்றதை தியானிப்போமாக !
• கானாவூர் திருமணத்தில் இயேசு தண்ணீரை திராட்சை இரசமாக மாற்றியதை தியானிப்போமாக !
• இயேசு விண்ணரசைப் பறைசாற்றியதை தியானிப்போமாக !
• இயேசு தாபோர் மலையில் உருமாற்றம் பெற்றதை தியானிப்போமாக !
• இயேசு கடைசி இரா விருந்துண்டதையும் நற்கருணை ஏற்படுத்தியதையும் தியானிப்போமாக !

ஜெபமாலை நிறைவில்:  
                 அதிதூதரான புனித மிக்கேலே, தேவதூதர்களான புனித கபிரியேலே, அப்போஸ்தலர்களான புனித இராயப்பரே, சின்னப்பரே, அருளப்பரே நாங்கள் எத்தனை பாவிகளாயிருந்தாலும், நாங்கள் வேண்டிக்கொண்ட இந்த ஜம்பத்து மூன்று மணிசெபத்தையும் உங்கள் ஸ்தோத்திரங்களோடே ஒன்றாகக் கூட்டி புனித தேவமாதாவின் திருப்பாதத்தில் பாத காணிக்கையாக வைக்க உங்களைப் பிராத்தித்துக் கொள்கிறோம். ஆமென். 



புனித தேவமாதாவின் பிராத்தனை   
சுவாமி கிருபையாயிரும்

கிறிஸ்துவே கிருபையாயிரும்

சுவாமி கிருபையாயிரும்


கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையைக் கேட்டருளும்

கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையை நன்றாகக் கேட்டருளும்


பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா -எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி

உலகத்தை மீட்டு இரட்சித்த சுதானாகிய சர்வேசுரா -எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி

தூய ஆவியாகிய சர்வேசுரா -எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி



புனித மரியோயே -எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

சர்வேசுரனுடைய புனித மாதாவே -எங்களுக்காக ...

கன்னியாஸ்திரீகளின் உத்தம கன்னிகையே ...

மகா அன்பிற்கு பாத்திரமாயிருக்கிற மாதாவே...

கிறிஸ்துவினுடைய மாதாவே...

தேவ வரப்பிரசாதத்தின் மாதாவே...

மகா பரிசுத்த மாதாவே...

அத்தியந்த விரத்தியாயிருக்கிற மாதாவே..

பழுதற்ற கன்னிகையாயிருக்கிற மாதாவே...

கன்னி சுத்தங்கெடாத மாதாவே...

மகா அன்புக்குப் பாத்திரமாயிருக்கற மாதாவே...

ஆச்சரியத்துக்குரிய மாதாவே...

நல்ல ஆலோசனை மாதாவே,,,

சிருஷ்டிகருடைய மாதாவே...

இரட்சகருடைய மாதாவே...

மகா புத்தியுடைத்தான கன்னிகையே...

மகா வணக்கத்துக்குரிய கன்னிகையே...

பிரகாசமாய் ஸ்துதிக்கப்பட்ட யோக்கியமாயிருக்கிற கன்னிகையே...

சக்தியுடைத்தவளாயிருக்கிற கன்னிகையே...

தயையுள்ள கன்னிகையே...

விசுவாசியாயிருக்கிற கன்னிகையே....

தருமத்தின் கண்ணாடியே...

ஞானத்துக்கு இருப்பிடமே...

எங்கள் சந்தோஷத்தின் காரணமே...

தேவ இரகசியத்தைக் கொண்டிருக்கிற ரோஜா புஷ்பமே...

ஞான பாத்திரமே...

மகிமைக்குரிய பாத்திரமே...

அத்தியந்த பக்தியுடைத்தான பாத்திரமே...

தாவீது இராஜாவுடைய உப்பரிகையே...

தந்த மயமாயிருக்கிர உப்பரிகையே...

சொர்ண மயமாயிருக்கிற ஆலயமே...

வாக்குத்தத்தத்தின் பெட்டகமே...

பரலோகத்தினுடைய வாசலே...

விடியக்காலத்தின் நட்சத்திரமே...

வியாதிக்காரருக்கு ஆரோக்கியமே...

பாவிகளுக்கு அடைக்கலமே...

கஸ்திப்படுகிறவர்களுக்கு தேற்றரவே...

கிறிஸ்தவர்களுடைய சகாயமே...

சம்மனசுக்களுடைய இராக்கினியே...

பிதா பிதாக்களுடைய இராக்கினியே...

இறைவாக்கினர்களுடைய இராக்கினியே...

அப்போஸ்தலர்களுடைய இராக்கினியே...

மறைசாட்சிகளுடைய இராக்கினியே...

துதியர்களுடைய இராக்கினியே...

கன்னியர்களுடைய இராக்கினியே...

அனைத்துப் புனிதர்களுடைய இராக்கினியே...

ஜென்ம பாவமின்றி உற்பவித்த இராக்கினியே...

பரலேகத்துக்கு ஆரோபணமான இராக்கினியே...

திருச் செபமாலையின் இராக்கினியே...

சமாதானத்தின் இராக்கினியே...



உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும்



உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்



உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே எங்கள் மேல் இரக்கமாயிரும்
                  
சர்வேசுரனுடைய பரிசுத்த மாதாவே ! இதோ உம்முடைய சரணமாக ஓடிவந்தோம். எங்கள் அவசரங்களிலே நாங்கள் வேண்டிக் கொள்ளுகிறதற்குப் பாராமுகமாய் இராதேயும். ஆசீர்வதிக்கப்பட்டவளுமாய் மோட்சமுடையவளுமாயிருக்கிற நித்திய கன்னிகையே ! சகல ஆபத்துக்களிலேயும் நின்று எங்களைத் தற்காத்துக் கொள்ளும். -ஆமென்.
இயேசு கிறிஸ்துவின் வாக்குறுதிகளுக்கு நாங்கள் தகுதியுள்ளவர்கள் ஆகும்படி, சர்வேசுரனுடைய பரிசுத்த மாதாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.



ஜெபிப்போமாக :
                  
இறைவா! முழுமனதோடே தெண்டனாக விழுந்துகிடக்கிற இந்த குடும்பத்தைப் பார்த்து எப்பொழுதும் பரிசுத்த கன்னியான மரியாளுடைய வேண்டுதலினாலே, சகல சத்துருக்களின் சற்பனையிலே நின்று பிரசன்னராய்த் தயை செய்து இரட்சியும். இந்த மன்றாட்டுக்களை எல்லாம் எங்கள் ஆண்டவரான இயேசுநாதருடைய திருமுகத்தைப் பார்த்து எங்களுக்குத் தந்தருளும். -ஆமென்



கிருபை தயாபத்து மந்திரம்
•  கிருபை தயாபத்துக்கு மாதாவாயிருக்கிற எங்கள் இராக்கினியே வாழ்க! எங்கள் ஜீவியமே, எங்கள் தஞ்சமே, எங்கள் மதுரமே வாழ்க! பரதேசிகளாயிருக்கிற நாங்கள் ஏவையின் மக்கள், உம்மைப் பார்த்து கூப்பிடுகிறோம். 
• இந்தக் கண்ணீர்க் கணவாயிலே நின்று பிரலாபித்தழுது, உம்மையே நோக்கிப் பெருமூச்சு விடுகிறோம். 
• ஆதலால் எங்களுக்காக வேண்டி மன்றாடுகிற தாயே, உம்முடைய தயாளமுள்ள திருக்கண்களை எங்கள் பேரில் திருப்பியருளும். 
• இதன்றியே நாங்கள் இந்தப் பரதேசம் கடந்த பிற்பாடு உம்முடைய திருவயிற்றின் கனியாகிய இயேசுநாதருடைய பிரத்தியட்சமான தரிசனத்தை எங்களுக்குத் தந்தருளும். 
• கிருபாகரியே, தயாபரியே, பேரின்ப இரசமுள்ள கன்னிமரியாயே!

- இயேசு கிறிஸ்து நாதருடைய திரு வாக்குத்தத்தங்களுக்கு நாங்கள் பாத்திரவான்களாய் இருக்கத்தக்கதாக

- சர்வேசுரனுடைய பரிசுத்த மாதாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். -ஆமென்.

ஜெபிப்போமாக:
                    
சர்வ சக்தியுடையவருமாய் நித்தியருமாய் இருக்கிற இறைவா! முத்திபேறுபெற்ற கன்னித்தாயான மரியாயினுடைய ஆத்துமமும் சரீரம் தூய ஆவியின் அனுக்கரகத்தினாலே தேவரீருடைய திருமகனுக்கு யோக்கியமான பீடமாயிருக்க ஏற்கெனவே நியமித்தருளினீரே. அந்த திவ்விய தாயை நினைத்து மகிழ்கிற நாங்கள் அவளுடைய இரக்கமுள்ள மன்றாடினாலே இவ்வுலகில் சகலப் பொல்லாப்புக்களிலேயும் நித்திய மரணத்திலேயும் நின்று இரட்சிக்கப்படும்படிக்கு கிருபை கூர்ந்தருளும். இந்த மன்றாட்டுக்களையெல்லாம் எங்கள் ஆண்டவராகிய இயேசுநாதருடைய திருமுகத்தைப் பார்த்து எங்களுக்குத் தந்தருளும். -ஆமென்.
 


புனித பெர்னதத்து கன்னிமரியிடம் வேண்டின ஜெபம்:
• மிகவும் இரக்கமுள்ள தாயே! உமது அடைக்கலமாக ஓடிவந்து, உம்முடைய உபகார சகாயங்களை இறைஞ்சி மன்றாடிக் கேட்ட ஒருவராகிலும் உம்மால் கைவிடப்பட்டதாக ஒருபோதும் உலகில் சொல்லக் கேள்விப்பட்டதில்லை என்று நினைத்தருளும். 
• கன்னியருடைய இராக்கினியான கன்னிகையே! தயையுள்ள தாயே! இப்படிப்பட்ட நம்பிக்கையால் ஏவப்பட்டு உமது திருப்பாதத்தை அண்டி வந்திருக்கிறோம். 
• பெருமூச்செறிந்து அழுது பாவிகளாயிருக்கிற நாங்கள் உமது தயாபரத்தில் காத்து நிற்கின்றோம். 
• அவதரித்த வார்த்தையின் தாயே எங்கள் மன்றாட்டைப் புறக்கணியாமல் தயாபரியாய் கேட்டுத் தந்தருளும் தாயே -ஆமென்
• ஜென்பப்பாவமில்லாமல் உற்பவித்த அர்ச்சிஷ்ட மரியாயே, பாவிகளுக்கு அடைக்கலமே, இதோ உம்முடைய அடைக்கலமாக ஓடிவந்தோம். 
• எங்கள் பேரில் இரக்கமாயிருந்து எங்களுக்காக உமது திருக்குமாரனை வேண்டிக்கொள்ளும். 
-அருள்நிறைந்த மந்திரம் (மூன்று முறை)



பரிசுத்த பாப்பரசரின் கருத்துக்கள் நிறைவேறும் படியாக ஜெபிப்போமாக :
ஒரு பரலோக மந்திரம், ஒரு அருள் நிறைந்த மந்திரம் மற்றும் ஒரு திரித்துவத் துதி சொல்வோம். 


பிதா சுதன் பரிசுத்த ஆவியின் பெயராலே -ஆமென்.

பரிசுத்த ஆவிக்கு மன்றாட்டு
• பரிசுத்த ஆவியே தேவரீர் எழுந்தருளி வாரும். பரலோகத்திலே உம்முடைய திவ்விய பிரகாசத்தின் கதிர்களை வரவிடும். 
• தரித்தர்களுடையே பிதாவே, கொடைகளைக் கொடுக்கிறவரே, இதயங்களின் பிரகாசமே எழுந்தருளி வாரும். 
• உத்தம ஆறுதலானவரே, ஆத்துமங்களுக்கு மதுரமான விருந்தாளியே, பேரின்ப இரசமுள்ள இளைப்பாற்றியே, பிரகாசத்தின் சுகமே, வெயிலின் குளிர்ச்சியே, அழுகையின் தேற்றரவே எழுந்தருளி வாரும்.
•  வெகு ஆனந்தத்தோடே கூடியிருக்கின்ற பிரகாசமே உமது விசுவாசிகளுடைய இதயங்களின் உற்பனங்களை நிரப்பும். 
• உம்முடைய தெய்வீகமின்றியே மனிதரிடத்தில் குற்றமில்லாதது ஒன்றுமில்லை. 
• அசுத்தமாயிருக்கிரதைச் சுத்தம் பண்ணும்.
• உலர்ந்ததை நனையும். 
• நோவாயிருக்கிரதைக் குணமாக்கும். 
• வணங்காதை வணங்கப் பண்ணும். 
• குளிரோடிருக்கிரதைக் குளிர்போக்கும். 
• தவறினதை செம்மையாய் நடத்தும். 
• உம்மை நம்பின உம்முடைய விசுவாசிகளுக்கு உம்முடைய திருக்கொடைகள் ஏழையும் கொடுத்தருளும். 
• புண்ணியத்தின் பேறுகளையும், நல்ல மரணத்தையும், நித்திய மோட்சானந்த சந்தோசத்தையும் எங்களுக்குத் தந்தருளும். ஆமென்.


சர்வேசுவரா எங்களுக்கு உதவியாயிரும். கர்த்தாவே எங்களுக்கு ஒத்தாசை செய்தருளும். பிதாவுக்கும், சுதனுக்கும், பரிசுத்த ஆவிக்கும் மகிமை உண்டாவதாக. ஆதியில் இருந்தது போல இப்பொழுதும், எப்பொழுதும் எங்கள் மரண நேரத்திலும் வேண்டிக்கொள்ளும். ஆமென்.
வல்லமை மிகுந்த இயேசுவே, சிலுவையில் நீர் கொண்டிருந்த எல்லா ஆசைகளோடும் ,எனது ஆசைகளையும் ஒன்றினைத்து உம்மை கூவி அழைத்து ஏழை பாவிகளுக்காக உமது இரக்கத்தை கெஞ்சி கேட்கின்றேன். அணை கடந்த அருள் பொங்கி வழியும் மகா பரிசுத்த திரு இருதயமே உமது பாடுகளை முன்னிட்டு உம் அன்பால் மீட்ட ஆன்மாக்களின் இழப்பை அனுமதியாதேயும். இயேசுவே ஒவ்வொரு ஆன்மாவும் உமது பாடுகளின் மீதும் இரக்கத்தின் மீதும் நம்பிக்கை வைக்கட்டும். நீர் உமது இரக்கத்தை எவர் ஒருவருக்கும் மறுப்பதில்லை. வானமும் பூமியும் மாறலாம். ஆனால் உமது இரக்கம் அழிந்து போவதில்லை. இயேசுவே! முடிவில்லா காலமும் உமது இரக்கத்தை மகிமை படுத்தும்படி நான் எல்லா பாவிகளையும் உமது திருப்பாதம் கொண்டு வருகிறேன். உலகம் முழுவதற்க்குமாய் உமது இரக்கத்தை இரஞ்சுகிறேன்.

யேசுவே! நீர் மரித்தீர். ஆனால் இந்த மரிப்பு ஆன்மாக்களின் வாழ்க்கை ஊற்றாகவும் , இரக்கத்தின் கடலுமாகவும் வழிந்தோடியது. ஓ! வாழ்வின் ஊற்றே ! கண்டுபிடிக்க முடியாத இறைவனின் இரக்கமே ! உலகம் முழுவதையும் உம்முன் அடக்கி உமது இரக்கம் முழுமையும் எம்மீது பொழிந்தருளும்.

யேசுவின் இதயத்திலிருந்து இரக்கத்தின் ஊற்றாக வழிந்தோடிய இரத்தமே! தண்ணீரே! உம்மீது நம்பிக்கை வைக்கிறேன்.

விசுவாச பிரமாணம்.

கர்த்தர் கற்பித்த செபம்.

மங்கள வார்த்தை செபம் (3 முறை )

செபமாலையின் பெரிய மணியில்:
நித்திய பிதாவே! எங்களாண்டவரும் , உமது நேசமகனுமான இயேசு கிறிஸ்துவின் உடலையும் உதிரத்தையும் ஆன்மாவையும், தெய்வீகத்தையும் எங்கள் பாவங்களுக்கும், அகில உலகின் பாவங்களுக்கும் பரிகாரமாக உமக்கு ஒப்புக் கொடுக்கிறோம்.

செபமாலையின் சிறிய மணியில் :
அவரது வேதனை நிறைந்த பாடுகள் வழியாக — எம்மீதும் ,அகில உலகின் மீதும் இரக்கமாயிரும்.
ஒவ்வொரு பத்து மணி செபமும் கீழ்கண்ட கருத்துக்களுக்காகச் சொல்லப்பட வேண்டும்.
1. இயேசு இரத்த வியர்வை வியர்த்ததை தியானிப்போமாக.
2. இயேசு கற்றூணில் கட்டுண்டு அடிபட்டதை தியானிப்போமாக.
3. இயேசுவின் தலையில் முள்முடி சூட்டப்பட்டதை தியானிப்போமாக.
4. இயேசு சிலுவை சுமந்து சென்றதை தியானிப்போமாக.
5. இயேசு சிலுவையில் அறையப்பட்டு மரித்ததை தியானிப்போமாக.
புனித இறைவா! புனித எல்லாம் வல்லவரே! புனித நித்தியரே ! எங்கள் மீதும் அகில உலகின் மீதும் இரக்கமாயிரும். ( 3 முறை)
இரக்கமுள்ள இயேசுவே! உம்மை நாங்கள் விசுவசிக்கிறோம். உம்மில் எங்கள் நம்பிக்கையை வைக்கிறோம். எங்கள் பலவீனத்திலும் இயலாமையிலும் எங்களுக்கு உதவியாக வாரும். நீர் எல்லோராலும் அறியப்படவும், நேசிக்கப்படவும் செய்ய எங்களுக்கு வரந்தாரும். அணைகடந்த உமது அன்பில் நம்பிக்கை வைக்கவும், உமது மகிமைக்காகவும் எங்கள் மீட்புக்காகவும் , உலகிலும் எம்மிலும் உள்ள தீய சக்திகளை முறியடிக்கவும் எமக்கு வரம் அருளும்.

ஆன்மாக்களுக்காக செபம்:

ஆண்டவரே! உமது எல்லையற்ற அன்பினால் எல்லாப் பாவிகளையும் மன்னித்து உமது நீதியின் வழிக்கு நடத்திச் செல்லும். இவர்களையும், இவர்களுடையவர்களையும், தீமையின் கொடுமையினின்று பாதுகாத்தருளும். தீமை செய்த அனைவரையும் மீட்டருளும். இறைவனின் இரக்கம் அவர்கள் மேல் இருப்பதாக. என் தேவனே! எனது இறைவனும் எனது அனைத்தும் ஆனவரே! என் யேசுவே இரக்கமாயிரும். இயேசு கிறிஸ்துவே! இரக்கத்தின் அரசே! நான் உம்மை நம்புகிறேன். யேசு , மரி , சூசை நான் உங்களை அன்பு செய்கிறேன். ஆன்மாக்களை மீட்டருளும். - ஆமென்.

இரக்கத்தின் பிரார்த்தனை
சுவாமி கிருபையாயிரும் — சுவாமி கிருபையாயிரும்
கிறிஸ்துவே கிருபையாயிரும் — கிறிஸ்துவே கிருபையாயிரும்
சுவாமி கிருபையாயிரும் — சுவாமி கிருபையாயிரும்
கிறிஸ்துவே எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும் — கிறிஸ்துவே எங்கள் பிரார்த்தனையை நன்றாகக் கேட்டருளும்.

பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா - எங்களை தயை பண்ணி இரட்சியும் சுவாமி
உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா - எங்களை தயை பண்ணி இரட்சியும் சுவாமி
பரிசுத்த ஆவியாகிய சர்வேசுரா - எங்களை தயை பண்ணி இரட்சியும் சுவாமி
தமத்திருத்துவமாகியிருக்கிற ஏக சுதனாகிய சர்வேசுரா - எங்களை தயை பண்ணி இரட்சியும் சுவாமி
அர்ச்சிஷ்ட மரியாயே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

உலகத்தை மீட்க காரணமாயிருந்த இரக்கத்தின் அரசராகிய இயேசுவே — இயேசுவே என் நம்பிக்கையை உமது பேரில் வைக்கிறோம்.
சகலமும் படைக்கப்பட காரணமாயிருந்த இரக்கத்தின் அரசராகிய இயேசுவே - இயேசுவே என் நம்பிக்கையை உமது பேரில் வைக்கிறோம்
எங்களை தினமும் அர்ச்சிக்கும் இரக்கத்தின் அரசராகிய இயேசுவே -
மகாப்பரிசுத்த திருத்துவத்தின் பரம இரகசியத்தை எங்களுக்கு வெளிப்படுத்தக் காரணமாயிருந்த இரக்கத்தின் அரசராகிய இயேசுவே -
கடவுளின் சர்வ வல்லமையை மானிடர்க்கு வெளிப்படுத்தக் காரணமாயிருந்த இரக்கத்தின் அரசராகிய இயேசுவே -
பரலோக அரூபிகளைப் படைக்கக் காரணமாயிருந்த இரக்கத்தின் அரசராகிய இயேசுவே -
ஒன்றுமில்லாமையிலிருந்து எங்களை உருவாக்கக் காரணமாயிருந்த இரக்கத்தின் அரசராகிய இயேசுவே -
உலகம் முழுவதையும் பரிபாலிக்கும் இரக்கத்தின் அரசராகிய இயேசுவே -
எங்களுக்கு நித்திய வாழ்வை அருளக் காரணமாயிருந்த இரக்கத்தின் அரசராகிய இயேசுவே -
நாங்கள் அடையவிருக்கும் தண்டனைகளிலிருந்து எங்களைக் காப்பாற்றி வரக் காரணமாயிருக்கும் இரக்கத்தின் அரசராகிய இயேசுவே -
பாவச் சேற்றிலிருந்து எங்களை மீட்டுக் கைத்தூக்கக் காரணமாயிருந்த இரக்கத்தின் அரசராகிய இயேசுவே -
மனித அவதாரத்தையும் பாடுகளையும் மரணத்தையும் ஏற்றுக்கொள்ளக் காரணமாயிருந்த இரக்கத்தின் அரசராகிய இயேசுவே -
சகல மனிதர்க்கும் எப்பொழுதும் எல்லா இடங்களிலும் உதவியளிக்கக் காரணமாயிருந்த இரக்கத்தின் அரசராகிய இயேசுவே -
உமது அருட்கொடைகளை முன்னதாகவே எங்களுக்கு அருள காரணமாயிருந்த இரக்கத்தின் அரசராகிய இயேசுவே -
தெய்வீகப் பரம இரகசியங்களை எங்களுக்கு வெளிப்படுத்தித் துலங்கச்செய்த இரக்கத்தின் அரசராகிய இயேசுவே -
சத்தியத் திருச்சபையை ஸ்தாபித்ததில் நீர் காட்டிய இரக்கத்தின் அரசராகிய இயேசுவே -
அருட்சாதனங்களின் கொடைகளில் காண்பிக்கும் இரக்கத்தின் அரசராகிய இயேசுவே -
ஞானஸ்நானத்திலும் பட்சாதாபத்திலும் நீர் அருளும் இரக்கத்தின் அரசராகிய இயேசுவே -
திவ்விய நற்கருணையிலும் குருத்துவத்திலும் நீர் தந்தருளிய இரக்கத்தின் அரசராகிய இயேசுவே -
பாவிகளை மனம் திருப்புவதில் நீர் காண்பிக்கும் இரக்கத்தின் அரசராகிய இயேசுவே -
அவிசுவாசிகள் ஒளி பெறுவதில் நீர் காண்பிக்கும் இரக்கத்தின் அரசராகிய இயேசுவே -
நீதிமான்களின் அர்ச்சிப்பில் நீர் வெளிப்படுத்திய இரக்கத்தின் அரசராகிய இயேசுவே -
உமது திருக்காயங்களிலிருந்து சுரந்தோடிய இரக்கத்தின் அரசராகிய இயேசுவே -
உமது மகாப்பரிசுத்த திரு இருதயத்திலிருந்து சுரக்கும் இரக்கத்தின் அரசராகிய இயேசுவே -
இரக்கத்தின் தாயாகிய புனித மரியம்மாளை எங்களுக்கு தரக் காரணமாயிருந்த இரக்கத்தின் அரசராகிய இயேசுவே -
நோயாளிகளுக்கும் துன்பப்படுவோர்க்கும் ஆறுதலான இரக்கத்தின் அரசராகிய இயேசுவே -
நொறுங்கிய இதயங்களுக்கு ஆறுதலான இரக்கத்தின் அரசராகிய இயேசுவே -
கதிகலங்கித் தவிக்கும் ஆன்மாக்களின் ஆறுதலான இரக்கத்தின் அரசராகிய இயேசுவே -
மரிப்போரின் அடைக்கலமாகிய இரக்கத்தின் அரசராகிய இயேசுவே -
உத்தரிக்கிற ஸ்தலத்து ஆன்மாக்களின் ஆறுதலான இரக்கத்தின் அரசராகிய இயேசுவே -
சகலப்புனிதர்களின் பரலோக ஆனந்தமாகிய இரக்கத்தின் அரசராகிய இயேசுவே -
மீட்கப்பட்டவரின் பரலோக ஆனந்தமாகிய இரக்கத்தின் அரசராகிய இயேசுவே -
அற்புதங்களின் வற்றாதத் துணையாகிய இரக்கத்தின் அரசராகிய இயேசுவே -

உலகத்தின் பாவங்களை போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே
— எங்கள் பாவங்களைப் போக்கியருளும் சுவாமி.
உலகத்தின் பாவங்களை போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே
— எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும் சுவாமி.
உலகத்தின் பாவங்களை போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே
— எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

முதல்வர்: ஆண்டவருடைய இரக்கங்கள், அவருடைய சகல படைப்புகள் பேரிலும் உள்ளன.
துணை: ஆதலால் ஆண்டவருடைய இரக்கத்தை என்றென்றைக்கும் பாடுவேன்.

செபிப்போமாக
மகாத் தயை நிறை இறைவா! இரக்கத்தின் தந்தையே! ஆறுதலின் தேவனே ! உம்மில் விசுவாசமும் நம்பிக்கையும் கொண்ட ஆன்மாக்கள் மீது இரக்கம் கொண்டீரே. உமது அளவற்ற இரக்கத்தைக் குறித்து எங்கள் பேரில் உமது கருணைக் கண்களைத் திருப்பியருளும். இத்துன்ப உலகில் எங்களுக்கு நேரிடும் எல்லா சோதனைகளிலும் , உமக்கு பிரமாணிக்கமாயிருக்க உமது இரக்கத்தின் அருட்கொடைகளை எங்கள் மீது நிறைவாகப் பொழிந்தருளும். என்றும் வாழ்பவரும் எல்லாம் வல்லவருமாகிய எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் திருமுகத்தைப் பார்த்து எங்களுக்கு தந்தருளும். ஆமென்.
அற்புத குழந்தை இயேசுவே! அமைதியற்ற எங்கள் உள்ளங்களின் மேல் உமது கருணைக் கண்களைத் திருப்பியருளுமாறு தாழ்ந்து, பணிந்து, வணங்கி வேண்டுகிறோம். இரக்கமே உருவான உம் இனிய இதயம் கனிவோடு எங்கள் செபத்தை ஏற்று உருக்கமாக நாங்கள் வேண்டும் . . . . . . (உறுதியோடு கேட்கும்) இந்த வரத்தை அளித்தருளுமாறு பணிவாக உம்மை கேட்கிறோம். எங்களை வாட்டி வதைக்கும் துன்பத் துயரங்களையும் வேதனைச் சோதனைகளையும் நீக்கி, உமது திருக்குழந்தை திருப்பருவத்தின் பெயரால் எங்கள் மன்றாட்டை ஏற்றருளும். அதனால் உமது ஆறுதலையும் ஆதரவையும் பெற்று, தந்தையோடும், தூய ஆவியோடும் உம்மை என்றென்றும் நாங்கள் வாழ்த்திப் போற்றுவோமாக. ஆமென்.

குழந்தை இயேசுவுக்கு புகழ்மாலை
சுவாமி கிருபையாயிரும் — சுவாமி கிருபையாயிரும்
கிறிஸ்துவே கிருபையாயிரும் — கிறிஸ்துவே கிருபையாயிரும்
சுவாமி கிருபையாயிரும் — சுவாமி கிருபையாயிரும்
கிறிஸ்துவே எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும் — கிறிஸ்துவே எங்கள் பிரார்த்தனையை நன்றாகக் கேட்டருளும்.

பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா - எங்களை தயை பண்ணி இரட்சியும் சுவாமி
உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா - எங்களை தயை பண்ணி இரட்சியும் சுவாமி
பரிசுத்த ஆவியாகிய சர்வேசுரா - எங்களை தயை பண்ணி இரட்சியும் சுவாமி
அர்ச்சிஷ்ட தமத்திருத்துவமாகியிருக்கிற ஏக சர்வேசுரா - எங்களை தயை பண்ணி இரட்சியும் சுவாமி
அற்புதக் குழந்தையாகிய இயேசுவே - எங்கள் மேல் இரக்கமாயிரும். 

வியத்தகு முறையில் செயல்படும் ஒப்பற்ற வல்லமையுடைய குழந்தை இயேசுவே - எங்கள் மேல் இரக்கமாயிரும்

எங்கள் எண்ணத்தையும் உள்ளத்தையும் ஆய்ந்தறியும் ஞானமுடைய குழந்தை இயேசுவே

எங்களுக்கு உதவிட என்றும் விரைந்துவரும் நன்மனமுடைய குழந்தை இயேசுவே

வாழ்க்கையின் முடிவுக்கும், கடைசி கதிக்கும் உமது பராமரிப்பால் எங்களை நடத்திச் செல்லும் குழந்தை இயேசுவே

உமது உண்மையின் ஒளியால் எங்கள் இதயத்தின் இருளை ஓட்டும் குழந்தை இயேசுவே

எங்கள் வறுமையை ஒளிக்கும் கொடை வள்ளலாகிய குழந்தை இயேசுவே

துன்புறுவோரைத் தேற்றும் நட்புறவுடைய குழந்தை இயேசுவே

உமது இரக்கத்தால் எங்கள் பாவங்களை மன்னிக்கும் குழந்தை இயேசுவே

எங்களைத் திடப்படுத்தும் வல்லமையுடைய குழந்தை இயேசுவே
தீமைகளை எல்லாம் அகற்றும் ஆற்றலுடைய குழந்தை இயேசுவே 

உமது நீதியால் பாவத்திலிருந்து எங்களைத் தடுத்தாட்கொள்ளும் குழந்தை இயேசுவே

நரகத்தை வெல்லும் திறமையுள்ள குழந்தை இயேசுவே

எங்கள் இதயங்களைக் கவரும் எழில் வதனமுள்ள குழந்தை இயேசுவே

உம் கையில் உலகத்தை ஏந்தும் பேராற்றலுள்ள குழந்தை இயேசுவே

ஆர்வமற்ற எங்கள் உள்ளங்களை உமது அன்புத் தீயால் பற்றி எரியச் செய்யும் குழந்தை இயேசுவே 

எல்லா நன்மைகளாலும் எங்களை நிரப்பும் குழந்தை இயேசுவே

ஆசீரை அளிக்கின்ற அற்புத கரமுள்ள குழந்தை இயேசுவே

பக்தர்களின் உள்ளங்களை மகிழச்செய்யும் இனிய பெயருடைய குழந்தை இயேசுவே

உலகை எல்லாம் நிரப்பும் மாட்சிமையுள்ள குழந்தை இயேசுவே - எங்கள் மேல் இரக்கமாயிரும்
கருணை கூர்ந்து — எங்களைப் பொறுத்தருளும் இயேசுவே,

கருணை கூர்ந்து — எங்கள் மன்றாட்டைக் கனிவாய் கேட்டருளும் இயேசுவே.

எல்லாத் தீமையிலிருந்து — எங்களை மீட்டு இரட்சித்தருளும் இயேசுவே.

எல்லாப் பாவத்திலிமிருந்து, அளவற்ற உம் நன்மைக்கு எதிராக எழும் எல்லா அவ நம்பிக்கையிலுமிருந்து — எங்களை மீட்டருளும் இயேசுவே.

அற்புதம் புரியும் உமது ஆற்றலுக்கு எதிராக எழும் எல்லாசந்தேகத்திலுமிருந்து — எங்களை மீட்டருளும் இயேசுவே.

உமது வழிபாட்டில் ஏற்படும் எல்லாக் குறைபாட்டிலுமிருந்து — எங்களை மீட்டருளும் இயேசுவே.

எல்லாத் தீமையிலும், கேட்டிலுமிருந்து — எங்களை மீட்டருளும் இயேசுவே.

உமது கன்னித்தாய் தூய மரியாள், வளர்ப்பு தந்தை தூயசூசையப்பர் இவர்களின் பரிந்துரை வழியாக எங்களை நீர் மன்னிக்க வேண்டுமென்று — உம்மை மன்றாடுகிறோம்.
உமது திருக்குழந்தைப் பருவத்தின் பால் எங்களுக்குள்ள அன்பையும், பக்தியையும் காத்து வளர்த்திட வேண்டும் என்று — உம்மை மன்றாடுகிறோம். 

அற்புத உம் திருக்கரம் எங்களை விட்டு விலகாதிருக்க வேண்டுமென்று — உம்மை மன்றாடுகிறோம்.

எண்ணற்ற உமது நன்மைகளை நாங்கள் என்றும் மறவாதிருக்க வேண்டுமென்று — உம்மை மன்றாடுகிறோம். 

உமது திரு இருதய அன்பால் எஙகள் உள்ளங்களை மேன்மேலும் பற்றி எரியச்செய்ய வேண்டுமென்று — உம்மை மன்றாடுகிறோம்.

நம்பிக்கையோடு உம்மை கூவியழைப்போரின் குரலுக்குக் கனிவாய்ச் செவிமடுக்க வேண்டுமென்று — உம்மை மன்றாடுகிறோம். 

எங்கள் நாடு அமைதியலே நிலைத்திருக்க அருள்தர வேண்டுமென்று — உம்மை மன்றாடுகிறோம்.

எல்லாத் தீமையிலிருந்தும் எங்களை விடுவித்தருள வேண்டுமென்று — உம்மை மன்றாடுகிறோம்.
உமது பக்தியிலே நிலைத்திருக்கும் அனைவருக்கும் நித்திய வாழ்வை அளித்தருள வேண்டும் என்று - உம்மை மன்றாடுகிறோம்
பொதுத்தீர்வை நாளிலே இரக்கத்துடன் எங்களுக்கு தீர்ப்பிட வேண்டும் என்று - உம்மை மன்றாடுகிறோம்
உமது அற்புத திருச்சுரூபத்திலே எங்களுக்கு ஆறுதலாகவும், அடைக்கலமாகவும் நீர் இருக்க வேண்டும் என்று - உம்மை மன்றாடுகிறோம்
இறைமகனே, மரிமகனே, இயேசுவே - உம்மை மன்றாடுகிறோம்
உலகத்தின் பாவங்களை போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே
— எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும் குழந்தை இயேசுவே.
உலகத்தின் பாவங்களை போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே
— எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் குழந்தை இயேசுவே.
உலகத்தின் பாவங்களை போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே
— எங்கள் மேல் இரக்கமாயிரும் குழந்தை இயேசுவே.

செபிப்போமாக இறைவா, விண்மீன் வழி நடத்த / உம் திருமகனை அனைத்துலக மக்களுக்கும் வெளிப்படுத்தினீர். / ஆற்றலும் அன்பும் நிறைந்த உம் திருமகன் / எம்மோடு இருக்கிறார் என்பதை விசுவாசத்தால் ஏற்றுக் கொள்ளும் நாங்கள்,/ வாழ்க்கையில் வரும் தடைகளையெல்லாம் கடந்து, / உமது மகத்துவத்தின் அழகைக் கண்டு களித்திட / எங்களை அழைத்துச் செல்வீராக./ எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம். — ஆமென்.
கிறிஸ்துவின் ஆத்துமமே — என்னை அர்ச்சித்தருளும்.
கிறிஸ்துவின் சரீரமே — என்னை இரட்சித்தருளும்.
கிறிஸ்துவின் இரத்தமே — எனக்குத் திருப்தியளித்தருளும்.
கிறிஸ்துவின் விலாவிலிருந்து ஒடி வரும் தண்ணீரே — என்னைக் கழுவியருளும்.
கிறிஸ்துவின் திருப்பாடுகளே — எனக்குத் தேற்றரவு அளித்தருளும்.
ஓ நல்ல இயேசுவே! — நான் கேட்பதை தந்தருளும்.
உமது திருக் காயங்களுக்குள்ளே — என்னை மறைத்தருளும்.
துக்ஷ்ட எதிரியிடமிருந்து — என்னை காத்தருளும்.
என் மரண வேளையில் — என்னை அழைத்தருளும்.
நித்திய காலமும் உம் புனிதர்களோடு உம்மை துதிக்க — நான் உம்மிடம் வரச் செய்தருளும்.
ஆமென்.

சிறு மணி :
யேசுவின் மதுரமான திரு இருதயமே — என் சிநேகமாயிரும். - (3)

பத்து மணி முடிந்தபின் :
மரியாயின் மாசற்ற இருதயமே — என் இரட்சண்யமாயிரும்.

பெரிய மணி :
இருதயத்தில் தாழ்ச்சியும் சாந்தமும் உள்ள இயேசுவே — இயேசுவே என் இருதயத்தை உமது திரு இருதயத்தை போலாகும்படி செய்தருளும்.

1 - ம் பத்து மணி: பிற மதத்தினர் முதலிய வேத விரோதிகளால் அவருக்குண்டாகும் நிந்தை அவமானங்களுக்குப் பரிகாரமாக.

சிறு மணி :
யேசுவின் மதுரமான திரு இருதயமே — என் சிநேகமாயிரும். (10)

பத்து மணி முடிந்தபின் :
மரியாயின் மாசற்ற இருதயமே — என் இரட்சண்யமாயிரும்.

பெரிய மணி :
இருதயத்தில் தாழ்ச்சியும் சாந்தமும் உள்ள இயேசுவே — இயேசுவே என் இருதயத்தை உமது திரு இருதயத்தை போலாகும்படி செய்தருளும்.

2 - ம் பத்து மணி: பொல்லாத கிறிஸ்தவர்களால் அவருக்குண்டாகும் நிந்தை அவமானங்களுக்குப் பரிகாரமாக.

சிறு மணி :
யேசுவின் மதுரமான திரு இருதயமே — என் சிநேகமாயிரும். (10)

பத்து மணி முடிந்தபின் :
மரியாயின் மாசற்ற இருதயமே — என் இரட்சண்யமாயிரும்.

பெரிய மணி :
இருதயத்தில் தாழ்ச்சியும் சாந்தமும் உள்ள இயேசுவே — இயேசுவே என் இருதயத்தை உமது திரு இருதயத்தை போலாகும்படி செய்தருளும்.

3 - ம் பத்து மணி: நாம் தாமே அவருக்குண்டாக்கும் நிந்தை அவமானங்களுக்குப் பரிகாரமாக.

சிறு மணி :
யேசுவின் மதுரமான திரு இருதயமே — என் சிநேகமாயிரும். (10)

பத்து மணி முடிந்தபின் :
மரியாயின் மாசற்ற இருதயமே — என் இரட்சண்யமாயிரும்.

பெரிய மணி :
இருதயத்தில் தாழ்ச்சியும் சாந்தமும் உள்ள இயேசுவே — இயேசுவே என் இருதயத்தை உமது திரு இருதயத்தை போலாகும்படி செய்தருளும்.

4 - ம் பத்து மணி: சகல மனிதராலும் அவருக்குண்டாகும் நிந்தை அவமானங்களுக்குப் பரிகாரமாகவும், பரிசுத்த தேவமாதா, சகல அர்ச்சியஷ்டர்களுடைய சிநேகப் பற்றுதலோடு நாமும்
நம்முடைய இருதயத்தை ஒப்புக் கொடுப்போம்.

சிறு மணி :
யேசுவின் மதுரமான திரு இருதயமே — என் சிநேகமாயிரும். (10)

பத்து மணி முடிந்தபின் :
மரியாயின் மாசற்ற இருதயமே — என் இரட்சண்யமாயிரும்.

பெரிய மணி :
இருதயத்தில் தாழ்ச்சியும் சாந்தமும் உள்ள இயேசுவே — இயேசுவே என் இருதயத்தை உமது திரு இருதயத்தை போலாகும்படி செய்தருளும்.

5 - ம் பத்து மணி: இயேசுவின் திரு இருதயமே! நாங்களும் மற்றவர்களும் உம்மை அறிந்து அதிகமாய் சிநேகிக்கும்படிக்கும் அனுகிரகம் செய்தருளும்.
சிறு மணி :
யேசுவின் மதுரமான திரு இருதயமே — என் சிநேகமாயிரும். (10)

பத்து மணி முடிந்தபின் :
மரியாயின் மாசற்ற இருதயமே — என் இரட்சண்யமாயிரும்.

பெரிய மணி :
இருதயத்தில் தாழ்ச்சியும் சாந்தமும் உள்ள இயேசுவே — இயேசுவே என் இருதயத்தை உமது திரு இருதயத்தை போலாகும்படி செய்தருளும்.

ஐம்பது மணி முடிந்த பின்

இயேசுவின் திரு இருதயமே! — எங்கள் பேரில் இரக்கமாயிரும்
ஜென்மப்பாவமில்லாமல் உற்பவித்த அர்ச் மரியாயின் மாசற்ற இருதயமே — எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
திரு இருதயத்தின் ஆண்டவளே — எங்களுக்காக வேண்டிகொள்ளும்
இயேசு நாதருடைய திரு இருதயமானது எங்கும் சிநேகிக்கப்படுவதாக என் இயேசுவே — என் பேரில் இரக்கமாயிரும்
திரு இருதயத்தின் சிநேகிதராகிய புனித சூசையப்பரே — எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

திரு இருதய பிரார்த்தனை

சுவாமி கிருபையாயிரும் — சுவாமி கிருபையாயிரும்
கிறிஸ்துவே கிருபையாயிரும் — கிறிஸ்துவே கிருபையாயிரும்
சுவாமி கிருபையாயிரும் — சுவாமி கிருபையாயிரும்
கிறிஸ்துவே எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும் — கிறிஸ்துவே எங்கள் பிரார்த்தனையை நன்றாகக் கேட்டருளும்.

பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா - எங்களை தயை பண்ணி இரட்சியும் சுவாமி
உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா - எங்களை தயை பண்ணி இரட்சியும் சுவாமி
பரிசுத்த ஆவியாகிய சர்வேசுரா - எங்களை தயை பண்ணி இரட்சியும் சுவாமி
தமத்திருத்துவமாகியிருக்கிற ஏக சுதனாகிய சர்வேசுரா - எங்களை தயை பண்ணி இரட்சியும் சுவாமி
அர்ச்சிஷ்ட மரியாயே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

என்றும் வாழும் பிதாவின் சுதனாகிய இயேசுவின் திவ்விய இருதயமே, - எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
பரிசுத்த கன்னித்தாயின் உதிரத்தில் தூய ஆவியால் உருவான இயேசுவின் திவ்விய இருதயமே, - எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
தேவ வார்த்தையான சுதனோடு ஒரே பொருளாய் ஒன்றித்திருக்கும் இயேசுவின் திவ்விய இருதயமே, - எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
அளவற்ற மகத்துவப் பிரதாபம் நிறைந்த இயேசுவின் திவ்விய இருதயமே, - எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
இறைவனுடைய அர்ச்சிக்கப்பட்ட ஆலயமாகிய இயேசுவின் திவ்விய இருதயமே, - எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
அதி உன்னத ஆண்டவரின் உறைவிடமான இயேசுவின் திவ்விய இருதயமே, - எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
இறைவனின் இல்லமும் விண்ணக வாசலுமான இயேசுவின் திவ்விய இருதயமே, - எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
அன்புத் தீ சுவாலித்தெரியும் சூளையான இயேசுவின் திவ்விய இருதயமே, - எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
நீதியும் நிநேகமும் தங்கியிருக்கும் இல்லிடமான இயேசுவின் திவ்விய இருதயமே, - எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
சகல புண்ணியங்களும் முழுமையாக நிறையப் பெற்ற இயேசுவின் திவ்விய இருதயமே, - எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
எல்லா ஆராதனைப் புதழ்ச்சிக்கும் முற்றும் உரிய இயேசுவின் திவ்விய இருதயமே, - எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
இருதயங்களுக்கெல்லாம் அரசும் அவைகளின் மைய இடமுமான இயேசுவின் திவ்விய இருதயமே, - எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
ஞானமும் அறிவும் நிறைந்த முழுநிறைச் செல்வமான இயேசுவின் திவ்விய இருதயமே, - எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
இறைத்தம்மை முழுமையாக தங்கி வழியும் இயேசுவின் திவ்விய இருதயமே, - எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
உமது பிதாவுக்கு உகந்த பிரிய நேசமுள்ள இயேசுவின் திவ்விய இருதயமே, - எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
உம்மில் நிறைந்துள்ள நன்மைகளை நாங்கள் அனைவரும் போற்றி மகிழச் செய்யும் இயேசுவின் திவ்விய இருதயமே, - எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
நித்திய சகரங்களின் ஆசையாகிய இயேசுவின் திவ்விய இருதயமே, - எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
பொறுமையும் மிகுந்த தயாளமும் உள்ள இயேசுவின் திவ்விய இருதயமே, - எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
உம்மை மன்றாடி வேண்டும் அனைவருக்கும் நிறைவை அளிக்கும் தாராளமான இயேசுவின் திவ்விய இருதயமே, - எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
வாழ்வுக்கும் புனித நிலைக்கும் ஊற்றான இயேசுவின் திவ்விய இருதயமே, - எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
எங்கள் பாவங்களின் மன்னிப்புக்கேற்ற பரிகாரமான இயேசுவின் திவ்விய இருதயமே, - எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
நிந்தை அவமானங்களால் நிறைந்து மிகுந்த இயேசுவின் திவ்விய இருதயமே, - எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
எங்கள் பாவச் செயல்களால் வேதனையுற்று வருந்தின இயேசுவின் திவ்விய இருதயமே, - எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
மரணம் வரையும் கீழ்படிந்திருந்த இயேசுவின் திவ்விய இருதயமே, - எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
ஈட்டியால் குத்தி ஊடுருவப்பட்ட இயேசுவின் திவ்விய இருதயமே, - எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
சர்வ ஆறுதல் அனைத்தின் ஊற்றாகிய இயேசுவின் திவ்விய இருதயமே, - எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
எங்கள் உயிரும் உயிர்ப்புமான இயேசுவின் திவ்விய இருதயமே, - எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
எங்கள் சமாதானமும் ஒற்றுமையின் இணைப்புமாகிய இயேசுவின் திவ்விய இருதயமே, - எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
பாவங்களுக்குப பலியான இயேசுவின் திவ்விய இருதயமே, - எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
உம்மிடத்தில் மரிக்கிறவர்களின் நம்பிக்கையாகிய சேசுவின் திவ்விய இருதயமே — எங்களை தயை பண்ணி இரட்சியும் சுவாமி
சகல அர்ச்சிஷ்டவர்களின் ஆனந்தமாகிய சேசுவின் திவ்விய இருதயமே — எங்களை தயை பண்ணி இரட்சியும் சுவாமி

உலகத்தின் பாவங்களை போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே
— எங்கள் பாவங்களைப் போக்கியருளும் சுவாமி.

உலகத்தின் பாவங்களை போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே
— எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும் சுவாமி.

உலகத்தின் பாவங்களை போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே
— எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

முதல்வர் - இருதயத்தில் தாழ்ச்சியும் சாந்தமும் உள்ள இயேசுவே 


துணைவர் - எங்கள் இருதயம் உமது இருதயத்துக்கு ஒத்திருக்கச் செய்தருளும்.

செபிப்போமாக:


என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா, உமது அன்புத் திருமகன் இருதயத்தையும் அவர் பாவிகளுக்காக உமக்குச் செலுத்தின பரிகாரத்தையும் வணக்க புகழ்ச்சிகளையும் தயை கூர்ந்து கண்ணோக்கியருளும். உமது இரக்கத்தை மன்றாடுகிறவர்களுக்கு நீர் இரங்கி, மன்னிப்பளித்தருளும்.உம்மோடு தூய ஆவியின் ஐக்கியத்தில் என்றேன்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும், உம் திருமகனுமாகிய அதே இயேசுகிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம். -ஆமென்

இயேசுவின் திரு இருதயத்துக்கு
குடும்பங்களை ஒப்புக் கொடுக்கிற செபம்

இயேசுவின் இரக்கமுள்ள திரு இருதயமே! /கிறிஸ்தவ குடும்பங்களுக்கு தேவரீர்  செய்துவரும் சகல உபகாரங்களையும் / சொல்லமுடியாத  உமது நன்மைத்தனத்தையும் நினைத்து / நன்றியறிந்த பட்சத்தோடு /உமது திருப்பாதத்தில் சாஷ்டாங்கமாக விழுந்து கிடக்கிறோம். / நேசமுள்ள இயேசுவே! /எங்கள் குடும்பங்களிலுள்ள சகலரையும் உமக்கு ஒப்புக் கொடுக்கிறோம். / தேவரீர் எங்களை ஆசீர்வதித்து /இப்பொழுதும் எப்பொழுதும் / உமது திரு இருதய நிழலில் நாங்கள் இளைப்பாறச் செய்தருளும். / தவறி எங்களில் யாராவது / உமது திரு இருதயத்தை நோகச் செய்திருந்தால் / அவர் குற்றத்துக்கு நாங்களே நிந்தை பரிகாரம் செய்கிறோம். / உமது திரு இருதயத்தை பார்த்து / எங்கள் பரிகாரத்தை ஏற்றுக் கொண்டு / அவனுக்கு கிருபை செய்தருளும். / இதுவுமன்றி / உலகத்திலிருக்கும் சகல குடும்பங்களுக்காகவும் உம்மை மன்றாடுகிறோம். / பலவீனர்களுக்கு பலமும் , / விருத்தாப்பியருக்கு ஊன்றுகோலும் / விதவைகளுக்கு ஆதரவமும் , / அனாதைப் பிள்ளைகளுக்கு தஞ்சமாயிருக்க தையைபுரியும். / ஒவ்வொரு வீட்டிலும் / நோயாளிகள் அவஸ்தைப்படுகிறவர்கள் தலைமாட்டில் / தேவரீர் தாமே விழித்துக் காத்திருப்பீராக. இயேசுவின் இரக்கமுள்ள திரு இருதயமே! / சிறு பிள்ளைகளை நீர் எவ்வளவோ பட்சத்தோடு நேசித்தீரே! / இந்த விசாரணையிலுள்ள சகல பிள்ளைகளையும் உமக்கு ஒப்புக் கொடுக்கிறோம். / அவர்களை ஆசீர்வதித்து / அவர்களுடைய இதயத்தில் / விசுவாசத்தையும் தெய்வ பயத்தையும் வளரச் செய்தருளும். / வாழும் காலத்தில் அவர்களுக்கு அடைக்கலமாகவும் / மரண நேரத்தில் ஆறுதலாகவும் இருக்கும்படி / உம்மை மன்றாடுகிறோம். / திவ்ய இயேசுவே! / முறை முறையாய் உமது அன்பில் வாழ்ந்து மரித்து / நித்திய காலமும் எங்கள் குடும்பம் முழுவதும் / உம்மோடு இளைப்பாற கிருபை புரிந்தருளும்.

ஆமென்.

 இப்புண்ணிய ஷேத்திரத்தில் மாட்சிமை தங்கிய மேலான சிம்மாசனத்தில் கிருபாசனங்கொண்டு எழுந்தருளியிருக்கிற புனித அந்தோனியாரே ! பரிசுத்தத்தனம் விளங்கும் லீலியே ! விலைமதிக்கப்படாத மாணிக்கமே ! பரலோக பூலோக காவலரே ! கஸ்தி துன்பப்படுகிறவர்களுக்குப் பரம சஞ்சீவியானவரே ! பாவிகளின் தஞ்சமே ! உமது இன்பமான சந்நிதானம் தேடி வந்தோம். உமது திருமுக மண்டலத்தை அண்ணாந்து பார்த்து உம்மைக் கெஞ்சி மன்றாடுகிறோம்.

மகா சிரவணம் பொருந்திய புனித அந்தோனியாரே ! சூரத்தனமுள்ள மேய்ப்பரே ! பசாசுகளை மிரட்டி ஓட்டுபவரே ! திருச்சபையின் கருணையின் கண்ணாடியானவரே ! இவ்உலகில் எங்கள் ஆதரவும் நீரல்லவோ ! எங்கள் தஞ்சமும் நீரல்லவோ ! எங்கள் சந்தோஷமும், நம்பிக்கையும், பாக்கியமும் நீரல்லவோ ! நீர் எங்கள் ஞானத்தந்தை என்பதை எங்களுக்குக் காண்பியும். பிள்ளைகள் செய்த குற்றங்களை தாய் தந்தையர்கள் பாராட்டுவார்களோ, உம்மைத் தேடிவந்த நிர்பாக்கியர்பேரில் தயவாயிரும். அழுகிறவர்களை அரவணையும்; அல்லல்படுகிறவர்களுக்கு ஆறுதலாக வாரும். நீர் இரங்காவிட்டால் எங்களுக்கு வேறு யார் இரங்குவார்? நீர் ஆதரியாவிட்டால் எங்களை வேறு யார் ஆதரிப்பார்? நீர் நினையாவிட்டால் எங்களை வேறு யார் நினைப்பார்? நீர் உதவாவிட்டால் எங்களுக்கு வேறு யார் உதவுவார்? தஞ்சமென்று ஓடிவந்த அடியோர்கள் பெயரில் தயவாயிரும். பரிசுத்த வெண்மையின் தூயதான தயாபரமே ! தயைக்கடலே ! தவிப்பவர்களுக்குத் தடாகமே ! தனித்தவருக்குத் தஞ்சமே ! உமது இன்பமான சன்னிதானம் தேடிவந்தோம். ஆறு, காடு, கடல்களைக் கடந்து ஓடிவந்தோம். துன்பம், பிணி, வருமை முதலிய கேடுகளினாலே வாடி நொந்தோம். எங்கள் நம்பிக்கை வீண்போகுமோ? எங்கள் மன்றாட்டு மறுக்கப்படுமோ? எங்கள் யாத்திரைகள் பயன் அற்றதாய்ப் போகுமோ? எங்கள் அழுகைக் கண்ணீர் உம்முடைய இதயத்தை உருக்காது போகுமோ? அப்படி ஆகுமோ ஐயா, எங்களின் அன்பான தகப்பனே! எங்களை முழுவதும் ஒப்புக்கொடுக்கிறோம். எங்களைக் கையேற்றுக்கொண்டு ஆசீர்வதித்தருளும் -ஆமென்.

புனித அந்தோனியார் பிராத்தனை

சுவாமி கிருபையாயிரும் - (2)
கிறிஸ்துவே கிருபையாயிரும் - (2)
சுவாமி கிருபையாயிரும் - (2)
கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையைக் கேட்டருளும்
கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையை நன்றாகக் கேட்டருளும்
பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா -எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா -எங்களை இஸ்பிரித்து சாந்துவாகிய சர்வேசுரா -எங்களை
தூய தமத்திருத்துவமாயிருக்கிற ஏக சர்வேசுரா -எங்களை
தூய மரியாயே -எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
பக்தி சுவாலகருக்கு ஒத்தவராகிய புனித பிரான்சிஸ்குவே -எங்களுக்காக
பதுவைப் பதியரான புனித அந்தோனியாரே -எங்களுக்காக
பரமண்டல திருவின் திருப்பெட்டியான புனித அந்தோனியாரே -எங்க....
மூப்பின் கீழமைச்சலுக்குக் கண்ணாடியான புனித அந்தோனியாரே
தர்மைத்தை மிகவும் பின் தொடர்ந்தவரான புனித அந்தோனியாரே
தர்ம நெறியில் மாறாத மனதை அபேட்சித்தவரான புனித அந்தோனியாரே
தூய்மையில் லீலிமலரான புனித அந்தோனியாரே
சர்வேசுரனுடைய திருவசனத்தின் தொனிச்சத்தமான புனித அந்தோனியாரே
இஸ்பானிய நாட்டுக்கு நட்சத்திரமான புனித அந்தோனியாரே
சுவிசேஷத்தை ஊக்கத்துடனே பிரசங்கித்து நடத்தினவரான புனித அந்தோனியாரே
இஸ்பிரித்து சாந்துவாகிய சர்வேசுரனுடைய படிப்பினைகளை விரும்பினவரான புனித அந்தோனியாரே
அவிசுவாசிகளுக்கு பயங்கரமாக உபதேசித்தவரான புனித அந்தோனியாரே
புண்ணியவான்களுக்குக் குறையற்ற படிப்பினையாகிய புனித அந்தோனியாரே
மீனாரென்கிற சந்நாசிகளுக்குப் படிப்பனையாகிய புனித அந்தோனியாரே
அப்போஸ்தலருடைய கொழுந்தான புனித அந்தோனியாரே
பாவிகளுக்கு வெளிச்சம் கொடுக்கிரவரான புனித அந்தோனியாரே
வழிதப்பிப் போகிறவர்களுக்குத் துணையான புனித அந்தோனியாரே
ஆச்சரியங்களைச் செய்கிறவரான புனித அந்தோனியாரே
குற்றமில்லாத ஜனங்களுக்கு ஆறுதலும் பாதுகாவலுமான புனித அந்தோனியாரே
ஊமைகளைப் போதிக்கிற உபதேசியாரான புனித அந்தோனியாரே
பிசாசுகளை மிரட்டி ஓட்டுகிறவரான புனித அந்தோனியாரே
அடிமைப்பட்டவர்களை மீட்கிறவரான புனித அந்தோனியாரே
வியாதிக்காரர்களை குணமாக்குகிறவரான புனித அந்தோனியாரே
மரணமடைந்தவர்களை சர்வேசுரனுடைய உதவியினாலே உயிர்பித்தவரான புனித அந்தோனியாரே
பிறவிக் குருடனுக்கு கண் கொடுத்தவரான புனித அந்தோனியாரே
காணமற்போனவைகளைக் காட்டிக் கொடுக்கிறவரான புனித அந்தோனியாரே
இழந்துபோன வஸ்துக்களை கண்டெடுக்கச் செய்கிறவரான புனித அந்தோனியாரே
வழக்காளிகளுடைய உண்மையைப் பாதுகாக்கறவரான புனித அந்தோனியாரே
பரமண்டலத்திற்குச் சுதந்திரவாளியான புனித அந்தோனியாரே
தரித்திரருக்கு இரத்தினமான புனித அந்தோனியாரே
சமுத்திரத்தின் மச்சங்களுக்கு உபதேசித்தவரான புனித அந்தோனியாரே
அப்போஸ்தலருடைய குறையற்ற சுத்திகரத்தை நேசித்தவரான புனித அந்தோனியாரே
புண்ணிய மென்கிற ஞானவெள்ளான்மையை பல நாடுகளில் விளைவித்தவரான புனித அந்தோனியாரே
உலகம் என்கிற அப்பத்தைப புறக்கணித்தவரான புனித அந்தோனியாரே
சமுத்திரத்தில் உபத்திரப்படுகிறவர்களை இரட்சித்தவரான புனித அந்தோனியாரே
சிற்றின்ப ஆசையை ஜெயித்தவரான புனித அந்தோனியாரே
எண்ணிறந்த ஆத்துமக்களைப் பரலோகத்தில் சேர்பித்தவரான புனித அந்தோனியாரே
நஞ்சிருக்கக்கண்டும் போசனம் அருந்தினவரான புனித அந்தோனியாரே
நன்நாக்கழியாத நற்தவத்தினரான புனித அந்தோனியாரே
புதுமைகளினால் பிரபல்யியமான புனித அந்தோனியாரே
திருச்சபையின் தெளிவான தீபமான புனித அந்தோனியாரே
ஐம்புலன் வென்றோர்களுடைய சபைக்கு அரணான புனித அந்தோனியாரே
சிறு குழந்தை சுரூபத்தைக் கொண்டிருந்த கர்த்தரைக் கையில் ஏந்தின புனித அந்தோனியாரே
உலகத்தின் பாவங்களைப் போக்கின்ற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய இயேசுவே
எங்கள் பாவங்களைப் போக்கியருளும் சுவாமி
உலகத்தின் பாவங்களைப் போக்கின்ற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய இயேசுவே
எங்கள் மன்றாட்டை தயவாய் கேட்டருளும் சுவாமி
உலகத்தின் பாவங்களைப் போக்கின்ற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய இயேசுவே
எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
புனித அந்தோனியாரே! சூரத்தனமுள்ள மேய்பரே, கஷ்டப்டுகிறவர்களுக்குச் சந்தோஷம் வருவிக்கிறவருமாய் பாவ அக்கினியுடைய சாந்தியை சீக்கிரத்திலே அமர்த்துகிறவரும் உன்னதப் பரம
மண்டலங்களில் இருக்கிறவருமான பிதாவானவர்.
இம்மையினுடைய அவதிக்கு பிற்பாடு எளியவர்களாயிருக்கிற எங்களுக்கு மோட்ச விருந்து தந்தருளவேண்டுகிறோம்.
இயேசு கிறிஸ்து நாதருடைய திருவாக்குத்தத்தங்களுக்கு நாங்கள் பாத்திரமாயிருக்கத்தக்கதாக,
பதுவைப் பதியரான புனித அந்தோனியாரே -எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

செபிப்போமாக:
சர்வேசுரா சுவாமி ! உமது ஸ்துதியரும் முத்தப்பேறு பெற்றவருமான தூய அந்தோனியாரை ஸ்துதிக்கிற உமது புனித பத்தினியான திருச்சபையின் பிள்ளைகளெல்லோரும் அவருடைய மன்றாட்டினால் சகல அவசரங்களிலும் உமது உபகார சகாயங்களை அடையும்படியாகவும், நித்திய பேரின்பத்திற்கு பாத்திரமாயிருக்கத் தக்கதாகவும் கிருபை கூர்ந்தருளும். -ஆமென்.
மகா பரிசுத்த கன்னிகையே, இயேசுவின் தாயாராயிருக்குமாறு நித்தியமாக பரிசுத்த மூவொறு கடவுளால் தெரிந்து கொள்ளப்பட்ட தூய மணியே! கடவுளுடைய திருப்புதல்வன் உமது திரு உதரத்தில் அவதாரமான போதும், ஒன்பது மாதமளவாக அவரை உமது மாசனுகாத கருவில் தாங்கிய போதும், நீர் அடைந்த பேரின்பத்தை உமது ஏழை ஊழியனாகிய அடியேன் உமக்கு நினைவூட்டுகிறேன். எனது அன்பினாலும், செபங்களாலும் நீர் அப்போது அனுபவித்த இன்பத்தை மீண்டும் புதிப்பிக்கவும், கூடுமானால் அதிகரிக்கவும் விரும்பிகிறேன்.

துன்பப்படுகிறவர்களுக்கு இரக்கம் மிகுந்த அன்னையே! நீர் அப்போது அனுபவித்த இப்பெருமகிழ்ச்சியைக் கொண்டாடுபவர்களுக்கு நீர் வாக்களித்துள்ள விசேஷ உதவியையும், பாதுகாப்பையும் எனக்கு இத்துன்ப நேரத்தில் தந்தருளும். உமது தெய்வப் புதல்வனுடைய அளவற்ற வல்லமையில் நம்பிக்கை கொண்டுள்ளேன். கேட்பவருக்கு அளிப்பதாக அவர் தந்த வாக்குறுதியை நினைத்து, உமது பெரும் வல்லமை நிறைந்த மன்றாட்டுக்களில் உறுதி கொண்டுள்ளேன். இந்த நவநாளின் போது நான் செய்யும் விண்ணப்பங்களை கடவுளுடைய திருச்சித்தத்திற்கு ஏற்றவையானால் அவரிடம் பரிந்து பேசி அடைந்து தந்தருளும். நான் கேட்கும் மன்றாட்டுகள் கடவுளுடைய திருவிருப்பத்திற்கு மாறானதாயிருந்தால் எனக்கு எவ்வரம் மிகவும் தேவையோ அதையே அடைந்து தந்தருளும்.

( இங்கு உம் மன்றாட்டு இன்னதெனச் சொல்லவும் )

தேவனின் தாயே! இப்போது உமக்கு வணக்கமாக நான் செய்யும் இந்நவநாளை உம்மில் நான் கொண்டிருக்கும் பெரும் நம்பிக்கையை காட்டுவதற்காகவே செய்கிறேன். இயேசு மனிதனான போது உமது திருவுள்ளம் அடைந்த தெய்வீக மகிழ்ச்சியை நினைத்து அதற்கு வணக்கமாக நான் செய்யும் இந்நவநாளையும் இப்போது நான் சொல்லப்போகும் ‘அருள்நிறை’ செபத்தையும் அன்புடன் ஏற்றுக்கொள்ளும்.

(இங்கு ‘அருள்நிறை’ செபத்தை ஒன்பது முறை சொல்லவும்)

கடவுளின் மாட்சி பெற்ற அன்னையே ‘அருள் நிறைந்தவள்’ என முதன் முதலில் அதிதூதர் கபிரியேல் சொன்ன போது கொண்டிருந்த பணிவு வணக்கத்துடன் நானும் இவ்வாழ்த்துகளைக் கூறுகிறேன், ஏற்றுகொள்ளும்.

நீர் அணிந்திருக்கும் முடியில் என் செபங்கள் அத்தனையும் விண்மீன்களெனத் துலங்குமாறு விரும்புகிறேன். வருந்துவோர்க்கு ஆறுதலே, நான் உம்மிடம் இப்போது மன்றாடும் விண்ணப்பங்கள் நிறைவேறுமாறு, உமக்கு வணக்கமாக இதுவரை பரிசுத்தவான்களால் செய்யப்பட்ட எல்லா புனித செயல்களையும் ஒப்புக்கொடுக்கிறேன். உமது திருமகனும், எங்கள் ஆண்டவருமான இயேசுநாதருடைய திரு இருதயத்தில் பொங்கி வழியும் பேரன்பையும், அது போன்ற உமது அன்பையும் பார்த்து, ஏழையான எனது செபத்தை ஏற்று என் மன்றாட்டை அடைந்து தந்தருளும் தாயே! ஆமென்.

அர்ச் தேவமாதாவின் பிரார்த்தனை

சுவாமி கிருபையாயிரும் — சுவாமி கிருபையாயிரும்
கிறிஸ்துவே கிருபையாயிரும் — கிறிஸ்துவே கிருபையாயிரும்
சுவாமி கிருபையாயிரும் — சுவாமி கிருபையாயிரும்
கிறிஸ்துவே எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும் — கிறிஸ்துவே எங்கள் பிரார்த்தனையை நன்றாகக் கேட்டருளும்.

பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா - எங்களை தயை பண்ணி இரட்சியும் சுவாமி
உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா - எங்களை தயை பண்ணி இரட்சியும் சுவாமி
பரிசுத்த ஆவியாகிய சர்வேசுரா - எங்களை தயை பண்ணி இரட்சியும் சுவாமி
அர்ச்சிஷ்ட தமத்திருத்துவமாகியிருக்கிற ஏக சர்வேசுரா - எங்களை தயை பண்ணி இரட்சியும் சுவாமி

அர்ச் மரியாயே — எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
சர்வேசுரனுடைய அர்ச் மாதாவே — எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
கன்னியாஸ்திரீகளின் உத்தம கன்னிகையே — எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
மகா அன்பிற்கு பாத்திரமாயிருக்கிற மாதாவே — எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
கிறிஸ்துவினுடைய மாதாவே — எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
தேவ வரப்பிரசாதத்தின் மாதாவே — எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
மகா பரிசுத்த மாதாவே — எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
அத்தியந்த விரத்தியாயிருக்கிற மாதாவே — எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
பழுதற்ற கன்னிகையாயிருக்கிற மாதாவே — எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
கன்னி சுத்தங்கெடாத மாதாவே — எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
மகா அன்புக்குப் பாத்திரமாயிருக்கற மாதாவே — எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
ஆச்சரியத்துக்குரிய மாதாவே — எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
நல்ல ஆலோசனை மாதாவே — எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
சிருஷ்டிகருடைய மாதாவே — எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
இரட்சகருடைய மாதாவே — எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
மகா புத்தியுடைத்தான கன்னிகையே — எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
மகா வணக்கத்துக்குரிய கன்னிகையே — எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
பிரகாசமாய் ஸ்துதிக்கப்பட்ட யோக்கியமாயிருக்கிற கன்னிகையே — எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
சக்தியுடைத்தவளாயிருக்கிற கன்னிகையே — எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
தயையுள்ள கன்னிகையே — எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
விசுவாசியாயிருக்கிற கன்னிகையே — எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
தருமத்தின் கண்ணாடியே — எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
ஞானத்துக்கு இருப்பிடமே — எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
எங்கள் சந்தோஷத்தின் காரணமே — எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
தேவ இரகசியத்தைக் கொண்டிருக்கிற ரோஜா புஷ்பமே — எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
ஞான பாத்திரமே — எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
மகிமைக்குரிய பாத்திரமே — எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
அத்தியந்த பக்தியுடைத்தான பாத்திரமே — எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
தாவீது இராஜாவுடைய உப்பரிகையே — எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
தந்த மயமாயிருக்கிர உப்பரிகையே — எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
சொர்ண மயமாயிருக்கிற ஆலயமே — எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
வாக்குத்தத்தத்தின் பெட்டகமே — எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
பரலோகத்தினுடைய வாசலே — எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
விடியக்காலத்தின் நட்சத்திரமே — எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
வியாதிக்காரருக்கு ஆரோக்கியமே — எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
பாவிகளுக்கு அடைக்கலமே — எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
கஸ்திப்படுகிறவர்களுக்கு தேற்றரவே — எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
கிறிஸ்தவர்களுடைய சகாயமே — எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
சம்மனசுக்களுடைய இராக்கினியே — எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
பிதா பிதாக்களுடைய இராக்கினியே — எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
இறைவாக்கினர்களுடைய இராக்கினியே — எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
அப்போஸ்தலர்களுடைய இராக்கினியே — எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
மறைசாட்சிகளுடைய இராக்கினியே — எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
துதியர்களுடைய இராக்கினியே — எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
கன்னியர்களுடைய இராக்கினியே — எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
அனைத்துப் புனிதர்களுடைய இராக்கினியே — எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
ஜென்ம பாவமின்றி உற்பவித்த இராக்கினியே — எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
பரலேகத்துக்கு ஆரோபணமான இராக்கினியே — எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
திருச் செபமாலையின் இராக்கினியே — எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
சமாதானத்தின் இராக்கினியே — எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
உலகத்தின் பாவங்களை போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே — எங்கள் பாவங்களைப் போக்கியருளும் சுவாமி.
உலகத்தின் பாவங்களை போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே

— எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும் சுவாமி.
உலகத்தின் பாவங்களை போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே — எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
சர்வேசுரனுடைய பரிசுத்த மாதாவே ! இதோ உம்முடைய சரணமாக ஓடிவந்தோம். எங்கள் அவசரங்களிலே நாங்கள் வேண்டிக் கொள்ளுகிறதற்குப் பாராமுகமாய் இராதேயும்.
ஆசீர்வதிக்கப்பட்டவளுமாய் மோட்சமுடையவளுமாயிருக்கிற நித்திய கன்னிகையே ! சகல ஆபத்துக்களிலேயும் நின்று எங்களைத் தற்காத்துக் கொள்ளும். -ஆமென்.
இயேசு கிறிஸ்துவின் வாக்குறுதிகளுக்கு நாங்கள் தகுதியுள்ளவர்கள் ஆகும்படி, சர்வேசுரனுடைய பரிசுத்த மாதாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

ஜெபிப்போமாக :
                   இறைவா! முழுமனதோடே தெண்டனாக விழுந்துகிடக்கிற இந்த குடும்பத்தைப் பார்த்து எப்பொழுதும் பரிசுத்த கன்னியான மரியாளுடைய வேண்டுதலினாலே, சகல சத்துருக்களின் சற்பனையிலே நின்று பிரசன்னராய்த் தயை செய்து இரட்சியும். இந்த மன்றாட்டுக்களை எல்லாம் எங்கள் ஆண்டவரான இயேசுநாதருடைய திருமுகத்தைப் பார்த்து எங்களுக்குத் தந்தருளும். -ஆமென்

மிகவும் இரக்கமுள்ள தாயே
மிகவும் இரக்கமுள்ள தாயே! உமது அடைக்கலமாக ஓடி வந்து, உம்முடைய உபகார சகாயங்களை இரந்து, உம்முடைய மன்றாட்டுகளின் உதவியைக் கேட்ட ஒருவனாகிலும் உம்மால் கைவிடப்பட்டதாக ஒரு போதும் உலகத்தில் சொல்லக் கேள்விப்பட்டதில்லை என்று நினைத்தருளும். கன்னியருடைய இராக்கினியான கன்னிகையே, தயையுள்ள தாயே, இப்படிப்பட்ட நம்பிக்கையால் ஏவப்பட்டு உம்முடைய திருப்பாதத்தை அண்டி வருகிறேன். பெருமூச்செறிந்து அழுது பாவியாகிய நான் உமது தயாளத்துக்குக் காத்துகொண்டு உமது சமூகத்திலே நிற்கிறேன். அவதரித்த வார்தையின் தாயே! என் மன்றாட்டைப் புறக்கணியாமல் தயாபரியாய்க் கேட்டுத்தந்தருளும். - ஆமென்.

ஜென்மப் பாவமில்லாமல் உற்பவித்த அர்ச் மரியாயே! பாவிகளுக்கு அடைக்கலமே! இதோ உம்முடைய அடைக்கலமாக ஓடி வந்த்தோம். எங்கள் பேரில் இரக்கமாயிருந்து எங்களுக்காக உம்முடைய திருக்குமாரனை வேண்டிக்கொள்ளும்.

அருள் நிறைந்த மரியாயே…
( மும்முறை செபிக்க )