அன்பே கடவுள். அனைத்தையும் கடந்து நம் ஒவ்வொருவருக்குள்ளும் வாழ்வதால் அவரே அன்பு. அன்பு என்றால் அனைத்தையும் புனிதமாக்கும் நிலை. நன்மை செய்வது தவிர வேறெதுவும் எதுவும் செய்யாத நிலை. மற்றவர் முகங்களிலும், மனத்திலும் மகிழ்ச்சியை உண்டாக்கும் கலை. இயற்கை படைப்புகளையே இறைவன் நம் நன்மைக்கே உருவாக்கினார். சூரியன் ஒளியையும், நிலா குளிர்தன்மையும், காற்று தென்றலையும் மரம் நிழலையும், செடி காய் கனியையும் தருவதை நாம் அனுபவிக்கிறோம்.

ஆகவே மனிதன் அன்பு செய்யவே படைக்கப்பட்டவன். அன்பு இல்லாதவன் வெறும் எலும்புக்கூடு என்கிறான் வள்ளுவன். அன்பினால் அனைத்தையும் சாதிக்கலாம். அன்பு மொழி பயில எந்த பல்கலைகழகமோ, எந்த பட்டப்படிப்போ தேவையில்லை.

இறையன்பும் பிறரன்பும் நாணையத்தின் இருபக்கங்கள். இதையே இறைஎசு இரண்டு கட்டளைகளாக தந்தார். நனையத்தில் இரு பக்கங்களும் சரியே இல்லையேல் அவை செல்லாக்காசுகள்.

நம்மை படைத்த இறைவனில் முழுமையாக நம்புவதே அன்பின் வெளிப்பாடு.

இந்த நம்பிக்கையை மற்றவர்களுக்கும் உய்ரோட்டம் பெறச் செய்வது. அதாவது தன்னைப்போல் பிறரும் நல்லா இருக்கணும் என்று எண்ணுவதே பிறர் அன்பு.

அன்பில் நிலைத்திருப்பது கடினம் என்று சொல்லலாம். ஆனால் பார்க்கும், பழகும் பிறரில் இறைவனைக் காணும் போது மனித நேயத்துடன் நெருங்கும் போது நிச்சயமாய் நாம் அன்பைத்தவிர வேறெதுவையும் கொடுக்க முடியாது.

அன்னை மரி போல இறையன்பில் மகிழ்ந்து பிறரன்பில் நிலைப்போம்.

அன்னை தெரெசாவைப் போல் அன்பின் சாட்சிய வாழ்வு வாழ முன் வருவோம்.