எல்லா வரங்களும் நிரம்பி ததும்புவர் தூயஆவியார். நம்மை தூய்மை படுத்தி வரங்களாலும், கொடைகளாலும் கனிகளாலும் நிரப்ப வல்லவர். ஆவியானவர் எங்குண்டோ அஙகு விடுதலை உண்டு. அவர் நமது தேற்றவாளன். நமது துணையாளர். தூய ஆவியானவர் நம்மை நிறை உண்மையை நோக்கி வழி நடத்துவார்.

ஆற்றலாலுமல்ல சக்தியாலுமல்ல தேவனுடைய ஆவியினாலே எல்லாம் ஆகும்.

தூய ஆவியின் கனிகள் அன்பு, மகிழ்ச்சி, அமைதி, பொறுமை, பறிவு, நன்னயம், நம்பிக்கை, கனிவு, தன்னடக்கம் ஆகும்.

தூய ஆவியின் வரங்கள் - ஞானம், புத்தி, விமரிசை, அறிவு, திடம், பக்தி, தெய்வபயம் இவைகளை பெற தூய ஆவியாரிடம் தினமும் ஜெயிப்போம்.

தூய ஆவியே எழுந்தருள்வீர்
வானின்றமது பேரொளியின்
அருட்சுடர் என்மித்தனுப்பிடுவீர்
எளியவர் தந்தாய் வந்தருள்வீர்
என் கொடை வள்ளலே வந்தருள்வீர்
இதய ஓளியே வந்தருள்வீர்

உழைப்பில் களைப்பை தீர்ப்பவரே
வைம்மை தணிக்கும் குளிர் நிழலே
அழுகையின் ஆறுதலானவரே

உன்னத பேரின்ப ஓளியே
உம்மை விசுவசிப்போருடைய
நெஞ்சின் ஆழம் நிரப்பிடுவீர்

உமத்தருள் ஆற்றல் இல்லாமல்
உள்ளது மனிதனில் ஏதுமில்லை

மனசு கொண்டதை கழிவிடுவீர்
வீரட்சியுற்றதை நனைத்திடுவீர்
காயப்பட்டதை ஆற்றுடுவீர்

வணங்காதிருப்பதை வளைத்திடுவீர்
குளிரானதை குளிர் போக்கிடுவீர்
தவறி போனதை ஆண்டருள்வீர்

இறைவா உம்மை விசுவசித்து
உம்மை நம்பும் அடியாருக்கு
கொடைகளை எழும் தந்திடுவீர்

புண்ணிய பலன்களை வழங்கிடுவீர்
இறுதியில் மீட்பும் தந்திடுவீர்
அளவில்லா இன்பம் அருள்வீரே.

தூய ஆவியின் ஆற்றல் பெற்று தூய்மையாய் வாழ்ந்து இறையருள் பெறுவோம்.